Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM

லண்டனில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் - ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதி :

லண்டனில் இந்திய கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கரோனா தொற்றுஉறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவருடன் இருந்த அணி ஊழியர்கள் 3 பேர் கட்டாய தனிமை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. வீரர்கள் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இலங்கையில் நடந்த கிரிக்கெட் தொடரை முடித்துவிட்டு வந்தஇந்திய அணி வீரர்கள் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவும் கட்டாயத் தனிமையை முடித்துவிட்டுதான் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் இணைந்தனர்.

இரு அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல், பயிற்சி மைதானம், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை வேற்று நபர்கள் யாரும் வராத வகையில் பயோ-பபுள் சூழலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்றுநேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்த அணியின் உதவி அலுவலர்கள் 3 பேர் கட்டாயத் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேலை பிசிசிஐமருத்துவக் குழுவினர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

ரவி சாஸ்திரிக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்த 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 4 பேரும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

இந்திய அணியின் மற்ற வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது எனவே, 4-வதுநாள் ஆட்டம் இடையூறின்றி நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x