Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM

சேலம் மாநகராட்சி பகுதியில் நிலவும் - சுகாதாரப் பிரச்சினைகளை பொதுமக்கள் தெரிவிக்க அழைப்பு : தொடர்புக்கு செல்போன் எண்கள் அறிவிப்பு

சேலம் மாநகராட்சி பகுதி யில் உள்ள சுகாதாரப் பிரச்சினைகளை பொதுமக்கள் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வசதியாக கோட்டம் வாரியாக சுகாதார அலுவலர்களின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணைர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கூட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ் வொரு மண்டலத்திலும் நிர்ண யிக்கப்பட்ட அலுவலர்கள் எப்பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை நேரடியாக ஆய்வு செய்து அப்பகுதியில் குறிப்பிட்ட நாளில் சிறப்பு கூட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாருதல், குப்பைகள் அகற்றுதல், சாலைகளில் கொட்டப்படும் மண்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல், குப்பைத் தொட்டிகள் வைத்தல், சாலைகளிலுள்ள முட்புதர்களை அப்புறப்படுத்துவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் அந்தந்த மண்டல அலுவலக சுகாதார அலுவலர்களை நேரடியாக செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதன்படி, சூரமங்கலம் மண்டலம் 3, 8, 23, 27, 38 கோட்டத்துக்கு தொடர்பு கொள்ள 99763 92560, கோட்டம் 24, 25, 26 சுகாதார ஆய்வாளரை 95001 33721, கோட்டம் 1, 2, 19, 20, 21, 22 சுகாதார ஆய்வாளரை 98433 39205, அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் 7,1 2 சுகாதார ஆய்வாளரை 75982 0570, கோட்டம் 6, 8, 13, 14, 15 சுகாதார ஆய்வாளரை 98428 90099, கோட்டம் 29, 30, 31 சுகாதார ஆய்வாளரை 98426 70126, கோட்டம் 4, 5, 16, 17 சுகாதார ஆய்வாளரை 98428 98755 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் 9, 10, 11, 36, 38 சுகாதார ஆய்வாளரை 98426 99888, கோட்டம் 32, 33, 34, 43, 44 சுகாதார ஆய்வாளரை 98420 65732, கோட்டம் 35, 37, 39, 40, 41, 42 சுகாதார ஆய்வாளரை 98656 96924 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம். 50, 54, 55, 58, 59 சுகாதார அலுவலரை0 80563 64466, கோட்டம். 46, 47, 48, 53 சுகாதார ஆய்வாளரை 99762 23919, கோட்டம் 45, 49, 51, 52, 56, 57, 60 சுகாதார ஆய்வாளரை 91599 88777 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x