Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM

பட்டுப்போன ஆலமரத்தால் விபத்து அபாயம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகற்றப்படுமா?

மதுரை செல்லூர் கண்மாய் கரையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பட்டுபோய் நிற்கும் ஆலமரத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை செல்லூர் கண்மாய் கரையை ஒட்டிச் செல்லும் குலமங்கலம் சாலையில் அதி களவு போக்குவரத்து உண்டு. இப்பகுதியில் சாலையோரத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக முழுவதும் பட்டுப்போன நிலை யில் ஒரு ஆலமரம் உள்ளது. ஆலமரத்தை பாதி வெட்டிவிட்டு அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.

தற்போது அந்த ஆலமரம் கீழே விழும் நிலையில் நிற்கிறது. மழை, காற்றின் போது இம்மரம் சாய்ந்து சாலையில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி விழும்போது விபத்துகள் ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் இந்த ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்க சமூக ஆர்வலர் அபுபக்கர் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x