Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

விமானத்திலிருந்து விழுந்து ஆப்கன் கால்பந்தாட்ட வீரர், டாக்டர் உயிரிழப்பு :

காபூல்

ஆப்கானிஸ்தானை தலிபான் கள் பிடித்த பிறகு உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற மக்கள் துடிக்கின்றனர். காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கள்கிழமை குவிந்தனர். அப்போது அங்கிருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தில் பலர் ஏற முயன்றனர். விமானத்தின் இறக்கைகள் உள்ளிட்ட பகுதிகளை பலர் தொற்றிக் கொண்டனர். அப்போது, விமானம் பறக்க தொடங்கிய சில நொடிகளிலேயே 3 பேர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இந்த காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்நிலையில், விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தவர்களில் ஆப்கானிஸ்தானின் தேசிய கால்பந்தாட்ட வீரரான ஜகி அன்வாரி மற்றும் டாக்டர் ஒருவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அந்நாட்டின் விளையாட்டு இயக்குநரகம் இதனை நேற்று உறுதி செய்தது.

ஆப்கானிஸ்தான் ஜூனியர் கால்பந்தாட்ட அணியில் விளையாடி வந்த ஜகி அன்வாரி, தனது திறமையால் மிகவும் பிரபலமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x