Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM

அரசு அலுவலகங்களில் உற்சாக கொண்டாட்டம் :

சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, தேசிய கொடியை ஏற்றிவைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் நீதிபதிகள், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமாரும், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆணையர் ககன்தீப் சிங் பேடியும், சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பார்த்தசாரதியும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாமும், தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அதுல் ஆனந்தும் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயில் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநர் கே.சைலேந்த்ரா தேசிய கொடியை ஏற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x