Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM

வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட - வாகனங்களை ஏலம்விட கோரிக்கை :

பொள்ளாச்சி குடிமைப்பொருள் அலுவலகத்தில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கனை ஏலத்துக்கு விடாததால், அவை துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

பொள்ளாச்சி பகுதியில் இருந்துரேஷன் அரிசி கடத்தி செல்லும் வாகனங்களை குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் அலுவலகத்தில் நிறுத்துகின்றனர். அந்தவகையில், வேன், கார்கள்,ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என 100-க்கும் அதிகமான வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல்செய்துள்ளனர். இந்த வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியில் லாததால், குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு செல்லும் வழித்தடத்திலும், அலுவலகத்தை சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் வாகனங்கள் தொடர்பான விவரங்கள் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய அனுமதி பெற்று ஆன்லைனில் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏல நடைமுறை, தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஆனால் பொள்ளாச்சியில் கடத்தல் வாகனங்கள் பிடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் ஏலம் விடப்படவில்லை. இதனால், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்து உருக்குலைந்து வீணாகி வருகின்றன. இதனால், அவற்றின் மதிப்பு குறைந்து, ஏலத்தின்போது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கும் வழி வகுக்கிறது. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு ஏலம் விட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x