Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கட்டுக்கு அமோக வரவேற்பு : மார்க்கெட்டிங் துணைத் தலைவர் தகவல்

� சென்னை

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே பொலிவுடன் அறிமுகமாகியுள்ள பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் வினய் சுப்ரமணியம் கூறியதாவது:

பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கட்டுக்கும் தமிழகத்துக்கும் இடையே 40 ஆண்டுகால நம்பிக்கை மிக்க உறவு இருக்கிறது. 1980-ம் ஆண்டுக்கு பின் தமிழகத்தில் பிறந்த பெரும்பாலானோரின் பால்ய காலம், பால் பாட்டில் வடிவிலான பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கட்டுடன் பிணைந்திருக்கிறது. 80'ஸ் மற்றும் 90'ஸ் கிட்ஸ்களின் என்றென்றைக்கும் விருப்பமான பிஸ்கட் இது என்பது அனைவரும் அறிந்தது.

நாங்கள் 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அந்த பிஸ்கட்டை அறிமுகப்படுத்த முடிவெடுத்த போது மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. நாங்கள் அறிவித்த எண்ணில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் அழைப்பு விடுத்து தங்களுக்கு மீண்டும் பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கட் வேண்டும் என கேட்டனர். சமூகவலைத் தளங்களில் ஏராளமானோர் எங்களின் பிஸ்கெட் உடனான தங்களின் கடந்த கால நினைவு களை அசைப்போட்டனர்.

தமிழக வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவால் மீண்டும் அதேபோல் மணம் மிக்க பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். 65 கிராம் எடையில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த பிஸ்கட் பாக்கெட்டுக்கு மக்கள் மகத்தான வரவேற்பை வழங்கியுள்ளார்கள்''என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x