Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

அரசு ஊழியர்களுக்கான கணினிவழி மாதிரி தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு :

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குரானா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் கணினிவழி தேர்வாக நடைபெற உள்ளன. இத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள், குறிப்புகள், பயிற்சி மாதிரி தேர்வு தொடர்பான வீடியோ காட்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/English/DNotification.aspx) வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கணினிவழி தேர்வுக்கு தயாராகத் தேவையான பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் மாதிரி தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x