Published : 05 Aug 2021 03:15 am

Updated : 05 Aug 2021 03:15 am

 

Published : 05 Aug 2021 03:15 AM
Last Updated : 05 Aug 2021 03:15 AM

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.மிதுனம்: தாயாருடன் எதிர்பாராது கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. மின்சாதனங்கள் பழுதாகும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.கடகம்: சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தாயார் ஆதரவாக இருப்பார்.சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.துலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களுக்கெல்லாம் தலைமை தாங்குவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.விருச்சிகம்: வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும்.தனுசு: மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் எளிதில் முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டு. திடீர் பயணம் ஏற்படும்.கும்பம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.மீனம்: ஆன்மீக ஆற்றல் கிட்டும். எதிர்காலத்தை உணரும் சக்தி உங்களுக்கு ஓரளவு கிடைக்கும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பணவரவு உண்டு



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x