Published : 05 Aug 2021 03:18 AM
Last Updated : 05 Aug 2021 03:18 AM

சென்னையில் மாருதி சுசூகி சார்பில் - 8 மாடல் சிஎன்ஜி கார்கள் விற்பனை தொடக்கம் :

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் கார்களின் விற்பனையை சென்னையில் 28 ஷோரூம்களில் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மாருதி சுசூகி இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாருதி சுசூகி நிறுவனம் தனது ஆல்டோ, செலிரியோ, எஸ்-பிரஸ்ஸோ,வேகன்ஆர், ஈகோ, டூர் எஸ், சூப்பர் கேரி,எர்டிகா உள்ளிட்ட மாடல் கார்களில் சிஎன்ஜியால் இயங்கும் ரகத்தை எஸ்-சிஎன்ஜி என்ற பிரிவின்கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை 16 அரினாஷோரூம்கள், 6 தற்காலிக விற்பனையகங்கள், 6 ஊரக விற்பனையகங்கள் என மொத்தம் 28 இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில், 26 புதிய சிஎன்ஜி விற்பனை நிலையங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. இதையடுத்து மாருதி புதிய சிஎன்ஜி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாருதி நிறுவனமே எஸ்-சிஎன்ஜி சாதனத்தை வாகனங்களில் பொருத்தி தருவதால், இதில்பல்வேறு நன்மைகள் உள்ளன. நுண்ணறிவு மிக்க எரிபொருள் செலுத்தும் அமைப்பு இருப்பதால், எரிபொருள்-காற்று ஆகியவை தேவையான அளவுக்கு சரியாக இன்ஜினுக்கு கிடைக்கும். இதனால் எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறந்த இன்ஜின் செயல்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வாகனத்தின் உறுதித்தன்மை, சஸ்பென்ஷன், பிரேக் ஆகியவை தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளன.

விபத்தில் சிஎன்ஜி அமைப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நன்குசோதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெயின்லெஸ்ஸ்டீல் பைப்கள் பொருத்தப்படுவதால் துருப்பிடிக்காமலும், வாயுக் கசிவுஇல்லாமலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரில் எரிவாயு நிரப்பும்பணி நடைபெறும் போது வாகனம் ஸ்டார்ட் ஆகாத வகையில் மைக்ரோ ஸ்விட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x