Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

மேஷம்: ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்தி, பாராட்டு பெறுவீர்கள்

மேஷம்: ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்தி, பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.ரிஷபம்: அலைச்சல், டென்ஷன் இருக்கும். முன்கோபத்தால் சிலரது நட்பை இழக்க நேரிடும். மாலைக்கு பிறகு நன்மை கிடைக்கும். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.மிதுனம்: குடும்பத்தினருடன் சின்னச் சின்ன விவாதங்கள் வந்துபோகும். சகோதர உறவுகளால் டென்ஷன், ஏமாற்றம் தோன்றி மறையும். மறைமுக எதிரிகளால் சில தொந்தரவுகள் ஏற்படும்.கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். இழுபறியாக இருக்கும் சில காரியங்களை இன்று முடிப்பீர்கள்.சிம்மம்: சோம்பல், களைப்பில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். செல்லும் இடங்களில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.கன்னி: எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பண வரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.துலாம்: பிள்ளைகள் உடல்நலத்தில் கவனம் அவசியம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். மாலைக்கு பிறகு மகிழ்ச்சி உண்டாகும்.விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் மனக்கசப்புகள் மறைந்து, அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னிச்சையாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாலைக்கு பிறகு எதிலும் நிதானம் அவசியம்.தனுசு: நினைத்த காரியங்கள் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பண வரவு, பொருள் வரவு அதிகரிக்கும்.மகரம்: பல வகையிலும் செல்வாக்கு கூடும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பது நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு முடியும்.கும்பம்: புதிய வாகனங்கள், விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். பேச்சில் நிதானம் அவசியம்.மீனம்: நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து தக்க சமயத்தில் உதவுவார்கள். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்திருக்கும் நல்ல சேதி, வெளியூரில் இருந்து வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x