Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

பண இழப்பு, தற்கொலையை தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சி - ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு : தடை விதிக்கும் சட்டம் ரத்து : அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பல்வேறு இணையவழி விளையாட்டுகளில் ஈடுபட்டு பொதுமக்கள் பலரும் தங்கள் பணத்தை இழந்து தற் கொலை செய்துகொண்ட நிகழ்வு கள் பதிவானது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண் டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி அவசரச்சட்டம் இயற்றியது. இந்த தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் அளிக்கப்படும். அதேபோல, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத் திருப்பவர்களுக்கு ரூ.10,000 அப ராதமும் 2 வருட சிறை தண் டனையும் வழங்கப்படும்.

இந்த அவசரச் சட்டம் 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், 1858-ம் ஆண்டு சென்னை நகர காவல் சட்டம், 1859-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் கொண்டு வரப்பட்டதாக அப்போது தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறியிருந்ததாவது:

ஆன்லைனில் ரம்மி விளை யாடுவது என்பது சூதாட்டம் அல்ல. திறமையை வளர்க்கும் விளை யாட்டு என கடந்த 1968-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. தங்களது நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் ரம்மி போன்ற விளையாட்டுகளில் பணம் செலுத்தியும் செலுத்தாமலும் விளையாடலாம் எனவும் தெரி விக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதித்து இருப்பது தவறானது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், ரம்மி விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது என்பதால் ஆன் லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் கடந்த ஜனவரி மாதம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டதைப்போல, தமிழகத்திலும் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படியே தமிழகத்திலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த 7 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதுவரை 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் சிறுவர்கள். ஒன்றுமறியாத குழந்தைகள்கூட தங்களது பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை தொலைத்துள்ளனர். மேலும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்கவே இந்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து நடந்து வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஏ.கே.கங்குலி, சி.ஆர்யமா சுந்தரம், பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ‘‘ஜல்லிகட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோதும், மாநில அரசு தனியாக சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது ஒவ்வொரு ஆண் டும் சுமார் 20 பேர் வரை உயி ரிழக்கின்றனர். ஆனால், ஆன் லைன் விளையாட்டுகளால் ஏற் படும் தற்கொலைகளை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மட்டும் தமிழக அரசு பிரத்யேகமாக தடை விதித்து இருப்பது ஏற்புடையதல்ல. இது சூதாட்டம் கிடையாது. திறமைக்கான விளையாட்டு. இதுபோல மாநில அரசால் தனிப்பட்ட முறையில் தடை விதிக்க முடியாது’’ என அவர்கள் வாதிட்டனர்.

அதற்கு பதிலளித்து அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிடும்போது, ‘‘ஆன்லைன் ரம்மி போன்ற விளை யாட்டுகளுக்கு பலர் அடிமையாகி பணத்தை இழந்து, தற்கொலையும் செய்துள்ளனர். அதன் காரண மாகவே இந்த ஆன்லைன் விளை யாட்டுகளுக்கு தடை விதிக்கப் பட்டது. பொதுநலனை கருத் தில்கொண்டே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு தனியாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது’’ என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத் துக்கு விரோதமானது. சட்டம் இயற்றுவதற்கு தகுந்த மற்றும் போதுமான காரணங்களை விளக்கவில்லை. எனவே, இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடி யாது. அதேநேரம் உரிய விதி களுடன் இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்காக புதிதாக சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு எந்தவொரு தடையும் இல்லை.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x