Published : 04 Aug 2021 03:23 am

Updated : 04 Aug 2021 03:23 am

 

Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

புதுடெல்லிக்கு விவசாயிகள் பயணம் :

புது டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு சென்ற விவசாயிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை: புதுடெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து போராட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலையில் இருந்து புதுடெல்லிக்கு 60 விவசாயிகள் நேற்று புறப்பட்டு சென்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலையில் இருந்து புதுடெல்லிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வெங்கடேசன் தலைமையில் 60 விவசாயிகள் நேற்று புறப்பட்டு சென்றனர். அவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் வீரபத்திரன், ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.





Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x