Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள் : முகக்கவசம், ஹெல்மெட் அணியாத 95 பேர் மீது வழக்கு

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்களிடம் போலீஸார் மற்றும் மீன் வளத் துறை அதிகாரிகள் கரோனா விழிப் புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

கடலூர் துறைமுகத்தில் ஞாயிற் றுக்கிழமையில் மீன் வாங்கிட பொதுமக்கள், வியாபாரிகள் கூடுவது வழக்கம். கடந்த சில வாரங்களாக மீன் வாங்க வரும் பொதுமக்கள், வியாபாரிகள் முகக்கவசம் அணியாமலும், சமூகஇடைவெளியை கடைபிடிக்கா மலும் இருந்து வந்தனர். இதனால் கரோனா பரவும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கடலூர் எஸ்பி சக்திகணேசன் உத்தரவின் பேரில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்றுகடலூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில் துறை முகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜங்கம் மற்றும் போலீஸார், மீன் வளத்துறை ஆய்வாளர் மணிகண்டன் ஆகி யோர் அடங்கிய குழுவினர் மீன் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முகக்கவசம் அணியாதிருந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ. 3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஹெல் மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 80 பேர் மீதும், சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி வந்த 10 வாகனங்கள் மீதும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தாத 14 வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீன்வாங்க வரும் பொதுமக்கள் கும்பலாக வருவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் பலஇடங்களில் போலீஸார் பேரிகார்டுவைத்து தடுப்பை ஏற்படுத்தி யிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x