Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

ரேஷன் கடைக்கு சரியான எடையில் பொருட்களை வழங்க வலியுறுத்தல் :

மதுரை: மதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சங்க (சிஐடியு) மண்டலப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. மண்டலத் தலைவர் கதிரேசபாண்டியன் தலைமை வகித்தார். மண்டல துணைச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். மண்டலச் செயலாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் எம்.அழகுலெட்சுமணன், வரவு - செலவு அறிக்கை சமர்ப்பித்தார். இதில், மாநில துணைத் தலைவர்கள் சண்முகம், சுப்புராஜ், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரா.தெய்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாநில பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் நிறைவுரையாற்றினார்.

கூட்டத்தில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 11 ஆண்டுகளாகப் பணிபுரியும் 2,012 கொள்முதல் நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் தலையீட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அதிகாரிகள் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x