Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை உயர்வு - கரோனா பரவல் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை :

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவல் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேரளாவில் கரோனா பரவல்அதிகரித்து வருகிறது. அங்கு கடந்தசில நாட்களாக தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் மீண்டும் நிரம்பி வழிகின்றன. இதனால் அம் மாநிலத்தில் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்குமுழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து தொழில்நிமித்தம் கேரளா சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பதொடங்கியுள்ளனர். இதையடுத்து தமிழக- கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேரளா மற்றும் மும்பை போன்ற பகுதிகளில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் அருகே சிறுமளஞ்சி பகுதியில் ஒரே தெருவில் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அத்தெரு முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 6 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம்வாரியாக பாதிப்பு எண்ணிக்கைவிவரம்: மானூர்- 2, நாங்குநேரி-2, ராதாபுரம்- 3, வள்ளியூர்- 1, சேரன்மகாதேவி- 6, களக்காடு- 1. தென்காசி மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. 10 பேர் குணமடைந்தனர். தற்போது 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தினசரி கரோனா பாதிப்பு 30-க்கும் குறைவாக இருந்தது. உயிரிழப்பும் குறைந்தது. இந்நிலையில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதில் மக்களில் பலர் அலட்சியம் காட்டத் தொடங்கினர். சுகாதாரத் துறையினர், போலீஸார் அபராதம் விதித்தும் கரோனா தடுப்பு விதிமுறைகளை பலர் பின்பற்றுவதில்லை. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதாரத்துறையினர், போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளஎல்லைப் பகுதியான களியக்காவிளையிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x