Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

31,000 டோஸ் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு :

வேலூர்

வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 சுகாதார மாவட்டங்களுக்கு 31 ஆயிரம் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 350 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 470 டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் நேற்று முன்தினம் வரப் பெற்றுள்ளது. இதில், வேலூர் மற்றும் திருவண்ணாமலை, செய்யாறு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 5 சுகாதார மாவட்டங்களுக்கு 31 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கோவிஷீல்ட் தடுப்பூசியில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தலா 4,500 டோஸ், செய்யாறுக்கு 4 ஆயிரம், திருவண்ணாமலைக்கு 6,500, ராணிப்பேட்டைக்கு 3,500 டோஸ் என மொத்தம் 23 ஆயிரம் டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியில் வேலூருக்கு 3,360, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செய்யாறுக்கு தலா 1,120, திருவண்ணாமலைக்கு 1,280 என மொத்தம் 8 ஆயிரம் டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x