Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடம் உறுதி செய்யப்படும் : பிரதமர் நரேந்திர மோடி தகவல்

சர்வதேச புலிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

சர்வதேச புலிகள் தினத்தில் வனவிலங்கு உயிரின ஆர்வலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் ஒட்டுமொத்த புலிகளில், சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட புலிகள் இந்தியாவை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை உருவாக்குவது நமது கடமை.

இந்தியாவின் 18 மாநிலங்களில் 51 புலிகள் காப்பகங்கள் அமைந்துள்ளன. கடந்த 2018 கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கையின்படி வரும் 2022-க்குள்புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா எட்டிவிட்டது.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக விலங்குகள், இயற்கையோடு இணைந்து மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதன்படி புலிகளைப் பாதுகாக்க வனப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களோடு இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவில் கடந்த 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,400 புலிகள் இருந்தன. கடந்த 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டில் 2,967 புலிகள் உள்ளன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x