Published : 30 Jul 2021 03:15 AM
Last Updated : 30 Jul 2021 03:15 AM

இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதா? : சிவகங்கை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரித்து நட வடிக்கை எடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை நடராஜபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

பனங்குடி கிராமத்தில் ஒரு ஊருணி, 17 கண்மாய்கள் உள்ளன. இந்த கிராமத்தினர் விவ சாயத்தை நம்பியே உள்ளனர். பனங்குடியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.4.6 லட்சம் மதிப்பில் வீரையன் கண்மாயில் தடுப் பணை கட்டப்பட்டுள்ளதாக இணையதளத்தில் தகவல் தெரி விக்கப்பட்டது.

அதில் தடுப்பணை கட்ட 14.10.2020-ல் அனுமதி வழங்க ப்பட்டதாகவும், 16 பேர் பணியில் ஈடுபட்டதாகவும், 3 மாதத்தில் பணி முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனங் குடியில் வீரையன் கண்மாய் என ஒன்றும் இல்லை. இல்லாத கண் மாயில் தடுப்பணை கட்டியதாக கூறப்பட்டுள்ளது.

பனங்குடி ஊராட்சி எழுத்தர் பனங்குடியை சேர்ந்தவர். இவர் தடுப்பணை கட்டியதாக முறைகேடு செய்து பணம் எடுத்துள்ளார். இவர் 21 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களில் முறைகேடு செய்து பொதுப் பணத்தை எடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியும் ஊராட்சி எழுத்தர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே வீரையன் கண்மாய் குறித்தும், வேலை உறுதி யளிப்பு திட்டத்தில் தடுப்பணை கட்டப்பட்டது குறித்தும் ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிரு ந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆனந்தி அமர்வில் விசார ணைக்கு வந்தது. பின்னர், பொதுமக்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஊரக வளர்ச்சி இயக்குநர் வீரையன் கண்மாய் தடுப்பணை கணக்குகளை ஆய்வு செய்யவும், தடுப்பணை கட்டியதாக கூறப்படும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி சிவகங்கை ஆட்சியரிடம் அறிக் கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில் சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x