Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

மேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் கருத்துவேறுபாடு வரும்.ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். கடனை தீர்ப்பதற் கான வழி பிறக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பணவரவு உண்டு.கடகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். விஐபியுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது. எதிலும் நிதானம் தேவை.கன்னி: மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். சொத்து தொடர்பான சிக்கல்களில் ஒன்று முடிவுக்கு வரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.விருச்சிகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும்.தனுசு: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்களுடன் எதிர்பாராது மனஸ்தாபம் வந்து நீங்கும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.மகரம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.கும்பம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.மீனம்: முக்கிய கோப்புகளைக் கையாளும்போது மிகவும் கவனம் தேவை. முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படக் கூடும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x