Published : 28 Jul 2021 03:19 AM
Last Updated : 28 Jul 2021 03:19 AM

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் - 17 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் :

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சி செய லாளர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சி களில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்கள் ஒரே ஊராட்சியில் பல வருடங்களாக பணியாற்றி வருவதாகவும், பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் (கிராம ஊராட்சி) 17 ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அக்ராகரம் ஊராட்சிசெயலாளர் பூபதி பணியாண்டப் பள்ளி ஊராட்சிக்கும், சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி செயலாளர் சிவகுமார் கேத்தாண்டப்பட்டிக் கும், சின்னக்கல்லு பள்ளி ஊராட்சி செயலாளர் சுதாகர் செட்டியப்பனூர் ஊராட்சிக்கும், சின்னகம்மியம்பட்டு செயலாளர் அருட்செல்வி பெரியகம்மியப் பட்டுக்கும், சின்னமூக்கனூர் செயலாளர் ரங்கநாதன் மூக்கனூர் ஊராட்சிக்கும், தாமலேரிமுத்தூர் செயலாளர் சேகர் ஏலகிரி கிராம ஊராட்சிக்கும், கோணாப்பட்டு செயலாளர் உமாபதி தாமலேரி முத்தூர் ஊராட்சிக்கும், கோணாப்பட்டு ஊராட்சி செயலாளர் ஆதி மூலம் புத்தாகரம் ஊராட்சிக்கும்.

கேத்தாண்டப்பட்டி செயலாளர் மேகநாதன் அக்ராகரம் ஊராட்சிக்கும், கூத்தாண்ட குப்பம் செயலாளர் வெங்கடேசன் கலந்திரா ஊராட்சிக்கும், மூக்கனூர் ஊராட்சி செயலாளர் சங்கர் சின்னமூக்கனூர் ஊராட் சிக்கும், பெரியகம்மியம்பட்டு ஊராட்சி செயலாளர் மோகன வேல் சின்னகம்மியப்பட்டு ஊராட் சிக்கும், புத்தாகரம் செயலாளர் ரகு கோணாப்பட்டு ஊராட்சிக்கும், ரெட்டியூர் ஊராட்சி செயலாளர் செல்வகுமார் சின்னவேப்பம்பட்டு ஊராட்சிக்கும், கலந்திரா ஊராட்சி செயலாளர் முரளி நெக்குந்தி ஊராட்சிக்கும், செட்டியப்பனூர் ஊராட்சி செயலாளர் கணபதி சின்னகல்லுப்பள்ளி ஊராட்சிக்கும் கூடுதலாக கூத்தாண்டகுப்பம் ஊராட்சிக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் பணி பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும் என ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x