Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

தமிழக பெண்ணுக்கு பிரதமர் பாராட்டு :

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது:

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்ற பெண், அம்பர்க்ஸ் திட்டத்தை தொடங்கியுள்ளார். மலைப்பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகள் எளிதாக கிடைப்பதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அவர் நடத்தும் சிற்றுண்டி விடுதியில் பணிபுரியும் நண்பர்களிடம் இருந்து நிதி திரட்டி உதவி வருகிறார் ராதிகா. இதனால், தற்போது, ஆறு அம்பர்க்ஸ் வண்டிகளை வாங்கி அவர் உதவி செய்து வருகிறார். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

இதேபோல் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் பாபுபலி கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி ஐசக் முண்டா, உள்ளூர் உணவு வகைகளை தயார் செய்வது எப்படி, பழங்கால உணவுகளைத் தயார் செய்வது எப்படி, தனது கிராமத்தின் வரலாறு, தனது வாழ்க்கை முறை, குடும்ப விவகாரம், உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டு நிறைய சம்பாதிக்கிறார். மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். அவரது முயற்சி பல காரணங்களுக்காக வேறுபட்டது என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக இதன் மூலம், நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு அதிகம் தெரியாத வாழ்க்கை முறையைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. ஐசக் முண்டா கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளை சமமாக கலப்பதன் மூலம் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார். இவ்வாறு மோடி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x