Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

ஜவகர் நவோதயா பள்ளியில் சேர : புதுவையில் ஆக. 11-ம் தேதி நுழைவுத்தேர்வு :

புதுச்சேரி

காலாப்பட்டில் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2021-22-ம் கல்வியாண்டுக்கு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ளது. புதுவையில் 6 மையங்களில் நுழைவுத்தேர்வு நடக்கிறது. நுழைவுத்தேர்வுக்கு புதுவை ஜவகர் நவோதயா வித்யாலயாவில் பதிவு செய்துள்ள 1,826 மாணவ, மாணவிகள் மறுஅட்டவணையின்படி அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வுக் கூடத்தில் கரோனா வழிகாட்டுதல்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x