Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

காவலர்கள் பணிக்கான : உடல் தகுதி தேர்வு இன்று தொடக்கம் : ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடக்கிறது

இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதித் தேர்வு மதுரை ஆயுதப்படை, ரேஸ்கோர்ஸ் மைதானங்களில் இன்று தொடங்குகிறது.

மதுரை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1700 பேருக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று முதல் ஆக.3 வரை உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2,727 தேர்வர் களுக்கு உடல்தகுதித் தேர்வு இன்று முதல் ஆக. 10 வரை நடைபெறுகிறது.

இந்த இரு இடங்களிலும் காலை 8.30 மணிக்கு தொடங்கும் இத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் தங்களுக்காக ஒதுக் கப்பட்ட நாட்களில் மைதா னத்துக்கு வரவேண்டும்.

திண்டுக்கல்

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று தொடங்கி ஆக.4 வரை இரண்டாம்நிலை காவலர், சிறை, தீயணைப்பு துறை பணிகளுக்கான உடல்தகுதி மற்றும் உடல் திறன் தேர்வு நடைபெறுகிறது என்று திண்டுக்கல் எஸ்.பி. ரவளிப்பிரியா தெரிவித்துள்ளார்.

இதில் 2806 ஆண்கள், 886 பெண்கள் என மொத்தம் 3692 பேர் பங்கேற்க உள்ளனர்.

நான்கு நாட்களுக்குள் மேற்கொண்ட கரோனா மருத் துவப் பரிசோதனைக்கான அசல் மருத்துவச் சான்றிதழ், இணைய வழியில் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது, சமர்ப்பித்த அசல் சான்றிதழ்களின் நகல்கள், அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

தேர்வரின் புகைப்படம் இன்றி இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வரின் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங் களான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதாவது அசல் ஒன்றைக் கண்டிப்பாகத் தேர்வர்கள் கொண்டு வர வேண் டும்.

நான்கு நாட்களுக்குள் மேற்கொண்ட கரோனா மருத்துவப் பரிசோதனைக்கான அசல் மருத்துவச் சான்றிதழ், கல்விச் சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x