Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம் :

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த பூசாரிப்பட்டி அருகே உள்ள சுந்தரகவுண்டனூரில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘விழித்திரு’ என்னும் தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், டிஎஸ்பி தமிழ்மணி, மனநல மருத்துவர் கிருத்திகா உட்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

‘‘குழந்தைகளை வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களில் பெரும்பாலானோர் குழந்தைக்கு அறிமுகமானவர்கள்தான். இதுகுறித்து குழந்தைகள், பெற்றோரிடம் பேசத் தயக்கம் காட்டலாம். வீட்டில் குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் நண்பர்களாக பழகி, குறைகளைக் கேட்டறிந்து பெற்றோர் சரிசெய்ய வேண்டும். குழந்தைகளின் உடலில் வித்தியாசமான காயம் அல்லது தழும்பு காணப்பட்டால் குழந்தையிடம் மென்மையாகப் பேசிக் காரணத்தை அறிய வேண்டும். எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என்பது பற்றி வாரம் ஒரு முறையாவது குழந்தையிடம் விளக்க வேண்டும். இது, இருபாலருக்கும் பொதுவானது’’ என கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x