Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

காட்பாடி மின்வாரிய கோட்டத்தில் - புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் வெளியீடு :

வேலூர்

காட்பாடி மின்வாரிய கோட்டத்தில் மின் புகார்கள் குறித்து பொது மக்கள் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் பரிமளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மின் பாதைகளில் மின்சாரம் தொடர்பான பழுதுகள், வேறு ஏதேனும் மின் பிரச்சினைகள், மின் பாதையில் மரங்கள், கிளைகள் குறுக்கீடுகள் இருந்தால் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். மின் கம்பங்கள் அருகில், ஸ்டே கம்பிகளை பிடித்து குழந்தைகள் விளையாடுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

புதிதாக மின் இணைப்பு கோரும் விண்ணப்பதாரர்கள் ஆர்சிடி என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டிடத்தில் பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன் மின் விபத்துகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மின் விநியோகம் தொடர்பான தகவல்களுக்கு கீழ் கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

காந்திநகர் உதவி செயற் பொறியாளர் 94458-55017, காந்திநகர் கிழக்கு இளநிலை பொறியாளர் 94458-55022, காந்திநகர் மேற்கு இளநிலை பொறியாளர் 94458-55023, லத்தேரி உதவி பொறியாளர் 94458-55054, உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம்) 94458-55018, தாராபடவேடு உதவி பொறியாளர் 94458-55021, காட்பாடி நகர உதவி பொறியாளர் 94458-55019.

கார்ணாம்பட்டு உதவி செயற் பொறியாளர் 94458-55052, திருவலம் உதவி பொறியாளர் 94458-55063, மேல்பாடி உதவி பொறியாளர் 94458-55064, மிட்டூர் உதவி பொறியாளர் 94458-55065, கார்ணாம்பட்டு உதவி பொறியாளர் 94458-55061, வடுகந்தாங்கல் உதவி செயற்பொறியாளர் 94458-55053, பி.கே.புரம் உதவி பொறியாளர் 94458-55056, செஞ்சி உதவி பொறியாளர் 94458-55059, கே.வி.குப்பம் உதவி பொறியாளர் 94458-55025.

வடுகந்தாங்கல் உதவி பொறியாளர் 94458-55058, காட்பாடி துணை மின் நிலைய உதவி பொறியாளர் 94458-55024, கார்ணாம்பட்டு துணை மின் நிலைய உதவி பொறியாளர் 94458-55062, வடுகந்தாங்கல் துணை மின் நிலைய உதவி பொறியாளர் 94458-55057 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x