Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

சிறப்பு தேவை உள்ளவர்களுக்கான வசதிகளுடன் - அக் ஷயா புதிய வீட்டு வசதி திட்டம் :

உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு பராமரிப்பாளர்கள் ஆதரவுடன், 58 வகையான நவீனவசதிகளை உள்ளடக்கிய வீட்டுவசதி திட்டத்தை ‘அக் ஷயா டுடே’ என்ற பெயரில் அக் ஷயாநிறுவனம் அறிவித்துள்ளது.

மொத்தம் 21 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தில் 2,134 வீடுகள் இருக்கும். இத்திட்டம் மார்ச் 2022-க்குள் தயாராகும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய வீட்டு வசதி திட்டத்துக்காக, சென்னையைச் சேர்ந்ததொண்டு நிறுவனமான ஸ்பெஷல் சைல்ட் அசிஸ்டன்ஸ் நெட்வொர்க் (ஸ்கேன்) உடன் அக்ஷயா நிறுவனம் புரிந்துணர்வுஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. வித்யா சாகர் அமைப்பும்இதில் இணைந்துள்ளது.

இந்த திட்டத்தில் சிறப்புதேவைகளைக் கொண்டுள்ளபெரியவர்களுக்கு பகிர்வு இடவசதிகள், இணை வாழ்க்கைவழங்கப்படும். அதேபோல பெற்றோர்களால் பார்த்துக்கொள்ள முடியாத பிள்ளைகளுக்கு வீட்டில் இருக்கும் அனுபவம் ஏற்படும்.

தொடக்க விழாவில் நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசும்போது, “குறைந்தபட்சம் 200பேருக்கு இங்கு வீடு கிடைக்கும். நம்பிக்கையை இழந்தமக்களுக்கு இங்கு அற்புதம் நிகழும். இது ஓர் ஆச்சரியமானமுன்மாதிரி திட்டமாகும். இந்ததிட்டத்தால் எனக்கு மனிதநேயத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.

அக் ஷயா தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிட்டிபாபு கூறும்போது, “முதல்முதலில் இதுபோன்ற திட்டத்தைதொடங்குவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். ரியல்எஸ்டேட் தொழிலில் அக் ஷயா பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல் படுத்தியுள்ளது.சிறப்பு தேவைகளைக் கொண்டவர்களுக்கு பல்வேறு வசதிகளைக் கொண்ட முழுமையானவீட்டு தீர்வை வழங்க உள்ளோம்’’ என்றார்.

ஸ்கேன் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கோபிநாத் ராமகிருஷ்ணன், வித்யா சாகர் நிறுவனர் பூனம் நடராஜன் ஆகியோரும் இத்திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். நடிகர் பப்லூ பிரித்தீவிராஜ் பேசும்போது, “இந்த திட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இங்கு ஒரு வீட்டை வாங்க முடிவு செய்துள்ளேன்” என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x