Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

தமிழகத்தில் மரம் நடுதலை தீவிரப்படுத்தி - வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் : அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் மரம் நடுதலை தீவிரப்படுத்தி வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர்மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல், காலநிலை மற்றும்வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள், அடுத்த 10ஆண்டுகளில் இத்துறைகளில் தொலைநோக்குடன் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள் வருமாறு:

மரம் நடுதல் திட்டத்தை தீவிரப்படுத்தி தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைஎடுக்க வேண்டும். மனிதர்கள், வனவிலங்குகளுக்கு இடையிலானமோதல்களை கட்டுப்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். வனப் பாதுகாப்பை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள 3 உயிர்கோள் காப்பகங்களான நீலகிரி, மன்னார் வளைகுடா மற்றும் அகஸ்தியர் மலை ஆகியவற்றை மேம்படுத்தி, சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள வன உயிரினசரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள வன உயிரினங்களை பாதுகாப்பதுடன், விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்ககடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள பறவைகள்சரணாலயம், புலிகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

தொழில் துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள்மற்றும் இளைய தலைமுறையினரை சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அசோக் உபரேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x