Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

மதுரை பீபிகுளத்தில் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கட்சி அலுவலகம், - அரசு அலுவலகங்களை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு :

மதுரை பீபிகுளம் கண்மாய் கரை யில் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கட்சி அலுவலகம், அரசு அலுவலகம், வழிபாட்டு தலங் களை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பீபிகுளம்-முல்லை நகர் குடியிருப்போர் சங்க செய லாளர் பாண்டிராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

பீபிகுளம் நேதாஜி மெயின் ரோட்டில் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். பீ.பீ.குளம் கண்மாய் கரையில் வீடுகள் கட்டி 50 ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்கள் தினக்கூலி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்.

இங்குள்ளவர்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரி களிடம் மனு அளித்தும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென பீபிகுளம் கண்மாய் பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாகக் கூறி, மதுரை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், மின் வாரிய அதிகாரிகள் இடித்து அப்பு றப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர் வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள கட்சி அலுவலகம், வணிக நோக்கில் செயல்படும் கட்டிடங்கள், வழிபாட்டுத்தலங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய வற்றை இடிக்க வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகிய மூன்று துறைகளை உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும்.

இந்தக்குழு ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை கணக்கெடுப்பு செய்து, எத்தனை வருடங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசார ணையை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x