Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் - தேவகோட்டை அருகே விஏஓ சஸ்பெண்ட் :

தேவகோட்டை அருகே ஆறா வயல் சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி (50). இவர் தனது வீட்டின் இடத்துக்கு புல வரைபடம், அ-பதிவேடு, அடங்கல் வாங்க மேலச்செம்பொன்மாரி குரூப் கிராம நிர்வாக அலுவலர் கோபிகண்ணனை அணுகினார்.

இந்த ஆவணங்களைக் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து அவர் கேட்ட தொகையைக் கொடுத்து பாண்டி ஆவணங்களைப் பெற்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையறிந்த மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி விசாரணை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர் கோபிகண்ணனை தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x