Published : 22 Jul 2021 03:12 AM
Last Updated : 22 Jul 2021 03:12 AM

கோதுமைக்கு எம்எஸ்பி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 240% உயர்வு :

புதுடெல்லி

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) பெறும் விவசாயிகளின் எண் ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் 240% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு குறுவை சாகுபடி பருவத்தில் 49.16 லட்சம் விவசாயிகள் கோதுமைக்கு எம்எஸ்பி அடிப்படையில் ஆதாயம் பெற்றுள்ளனர் என்று உணவு அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. 2016-2017-ம் ஆண்டில் எம்எஸ்பி அடிப்படையில் தங்களது உற்பத்தியை மத்திய அரசுக்கு அளித்த விவசாயிகளின் எண்ணிக்கை 20.47 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல நெல்லுக்கான எம்எஸ்பி அடிப்படையில் ஆதாயம் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 1.28 கோடி என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது 175% அதிகமாகும். 2015-16-ம் ஆண்டு குறுவை சாகுபடி காலத்தில் எம்எஸ்பி அடிப்படையில் நெல்லை மத்தியஅரசுக்கு அளித்த விவசாயிகளின் எண்ணிக்கை 73.1 லட்சமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்எஸ்பி-யை மத்திய அரசு கைவிட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்விதம் விவசாயிகள் பயனடைவது குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த புள்ளி விவரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x