Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

மேஷம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும்

மேஷம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மூத்த சகோதரர் உதவுவார்.கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். பணப்பற்றாக்குறை நீங்கும்.துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். ஆன்மிகப் பயணம் ஏற்படும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும்.தனுசு: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். பணவரவு உண்டு.மகரம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். வெளியூர் பயணத்துக்கு திட்டமிடுவீர்கள்.கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.மீனம்: வீண்செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வருமானத்தை உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x