Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த - 921 மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு : மாநிலங்களவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் தகவல்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தும்மலப்பள்ளி கலாஷேத்திரம் என்ற இடத்தில் உள்ள பரிசோதனை மையத்தில் நேற்று கரோனா பரிசோதனைக்காக பெண்ணிடம் இருந்து மாதிரிகளை சுகாதாரப் பணியாளர் சேகரிக்கிறார். படம்: கிரி கேவிஎஸ்

புதுடெல்லி

கரோனா பாதிப்பால் உயிரிழந்த 921 மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது:

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத் துவர்கள், சுகாதாரப் பணியாளர் களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை 15-ம் தேதி வரை கரோனா வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 921 மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பலன்கள் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அரசு உணர்ந்துள்ளது. எனவே, அவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணி யாளர்கள் தொற்றால் பாதிக்கப் படும் அபாயத்தை குறைக்க தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடைமுறைகள் பற்றிய வழிகாட்டு விதிகளை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அளித் துள்ளது.

கரோனா தொற்று ஏற்படு வதைத் தடுக்க சுகாதாரப் பணி யாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்களும் முன்களப் பணியாளர்களும் பாதுகாப்பு கவச உடை அணிவது தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளும் ஏற் கெனவே அளிக்கப்பட்டுள்ளன. கரோனா 2-வது அலையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திறம்பட சமாளித் தது. மத்திய அரசின் நடவடிக்கை களால் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x