Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் வளையல் வைபவம் தொடக்கம் : தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைவு

சென்னை

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனம் 1964-ம் ஆண்டு முதல் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை மக்கள் விரும்பும் வண்ணம் தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் ஆண்டுதோறும் வளையல் வைபவத்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வைபவத்தை மேலும் சிறப்பானதாக மாற்ற, ஜிஆர்டி ஜுவல்லர்ஸில் வாங்கும் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைவாகவும், வைரம் மற்றும் அன்கட் வைரங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் பெறலாம்.

மேலும் வெள்ளி நகைகளின் அதிகபட்ச சில்லறை விலையின் மீது 10 சதவீத தள்ளுபடியும், வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தில் 15 சதவீதம் தள்ளுபடியும் பெறலாம்.

இதுகுறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.அனந்தபத்மநாதன் கூறும்போது, “ஒவ்வொரு பெண்ணும் அவசியம் வாங்கும் ஆபரணம் வளையல் என்பதை அறிவோம். எனவே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த டிசைன்களில் ஏராளமான வளையல்களை வழங்கியுள்ளோம்” என்றார்.

மற்றொரு நிர்வாக இயக்குநரான ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப பல புதுமையான கலெக் ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் எங்களிடம் கிடைக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x