Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

தமிழகம், புதுச்சேரியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : சிறப்பு முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண் பட்டியல் 22-ல் கிடைக்கும்

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளி யிடப்பட்டன. இதில், 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர். சிறப்பு முறையில் கணக் கிடப்பட்ட மதிப்பெண்கள் வழங் கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் (2020-2021) பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட் டது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் அவசியம் என்பதால் மதிப்பெண் கணக்கீடு செய்வது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு அளித்த பரிந்துரை யின் அடிப்படையில், எஸ்எஸ்எல்சி தேர்வு மதிப்பெண் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண் 20 சதவீதம், பிளஸ் 2 தேர்வு செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதாச்சார அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப் பெண்கள் வழங்க அரசு முடிவு செய் தது. மதிப்பெண் கணக்கீட்டு பணி கள் முடிவடைந்த நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கக தலைமை அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேற்று காலை 11 மணிக்கு இணையதளத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது பள்ளிக்கல்வி ஆணை யர் கே.நந்தகுமார், அரசு தேர்வு கள் இயக்குநர் சி.உஷாராணி, இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) மு.ராமசாமி ஆகியோர் உட னிருந்தனர். அடுத்த சில விநாடிகளில் அனைத்து மாணவர் களுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்பட்டன.

தமிழகம் முழுவதும் 7,400 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 35 ஆயிரத்து 973 மாணவி கள், 3 லட்சத்து 80 ஆயிரத்து 500 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 பேர் மதிப்பெண் கணக்கீட்டுக்கு தகுதி பெற்றனர். இதில் மாற்றுத் திறனாளி கள் 2,821 பேர். மதிப்பெண் கணக் கீட்டில், யாரும் 600-க்கு 600 எடுக்க வில்லை. அறிவியல் பிரிவில் 30,599 பேர், வணிகவியல் பிரிவில் 8,909, கலை பிரிவில் 35, தொழிற்கல்வி பிரிவில் 136 என ஒட்டுமொத்தமாக 39,679 பேர் 551-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வழக்கமாக பிளஸ் 2 பாட மதிப்பெண் முழு எண்ணாக இருக் கும். ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மதிப்பெண் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட வெயிட்டேஜ் அளிக்கப்பட்டதால் தசம எண்களுடன் கூடிய மதிப்பெண் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகளை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச் சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:

பிளஸ் 2 மாணவர்கள் மதிப் பெண் பட்டியலை வரும் 22-ம் தேதி (வியாழக்கிழமை) இணையதளத் தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மொத்தம் 8 லட்சத்து 18 ஆயி ரத்து 129 மாணவ, மாணவிகளின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. அவர்களில் பிளஸ் 1 பொதுத் தேர்வில், 1,656 பேர் எந்த தேர்விலும் பங்கேற்கவில்லை. அந்த வகை யில், தகுதியுள்ள 8 லட்சத்து 16 ஆயி ரத்து 473 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற் றிருக்கிறார்கள். தேர்ச்சி சதவீதம் 100 சதவீதம் ஆகும். பிளஸ் 1 தேர்வில் அரியர் வைத்திருந்த 33,557 பேரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய கணக்கீட்டு முறையில் பெற்ற மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால் அவர் களுக்கும், அதுபோல் 39 ஆயிரம் தனித் தேர்வர்களுக்கும் செப் டம்பர் அல்லது அக்டோபரில் பொதுத்தேர்வு நடத்தப்படும். அப் போது நிலவும் கரோனா சூழலும் கருத்தில் கொள்ளப்படும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட் டதை போன்று எஸ்எஸ்எல்சி மதிப் பெண் பட்டியல் அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்) என்ற அடிப் படையில்தான் அமைந்திருக்கும். எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் வெகுவிரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

புதுச்சேரியில்..

தமிழக கல்வி வாரியத்தையே பின்பற்றுவதால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாண வர்களுக்கும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. அங்கு தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வெளியிட்டார். புதுச்சேரி, காரைக்காலில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 14,674 மாணவ, மாணவிகளும் அதா வது 100 சதவீதம் தேர்ச்சி பெற் றுள்ளனர். தமிழக முறையிலேயே புதுச்சேரியிலும் மதிப்பெண் கணக் கிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x