Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM

‘டவ்தே’ புயலின்போது கடலில் காணாமல்போன - 12 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் :

‘டவ்தே’ புயலில் சிக்கி கடலில் மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் நிவாரண உதவியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில்

நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர்அலுவலகத்தில் மீனவர் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் முன்னிலை வகித்தார். மீன்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ‘டவ்தே’ புயலில் சிக்கி மாயமான 12 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.40 கோடி மதிப்பிலான காசோலை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, “ கேரள மாநிலம் வெப்பூர் துறைமுகத்தில் இருந்து கடந்த மே 5-ம் தேதி விசைப்படகில் 16 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க மங்களாபுரம் சென்றனர். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ‘டவ்தே’ புயல் தாக்கி 16 மீனவர்களும் கடலில் காணாமல்போயினர். இவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். காணாமல்போன மீனவர்கள்குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படாத நிலையில், மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x