Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM

காட்பாடி - திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத : சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம் :

சென்னை: பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு காட்பாடி - திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் ,‘‘பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங் களில் சிறப்பு ரயில்கள் அதிகரித்து இயக்கப்படுகின்றன. அதன்படி, காட்பாடி - திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கப்படவுள்ளன. திருப்பதியில் இருந்து இன்று முதல் தினசரி காலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07659) அதேநாளில் காலை 9.15 மணிக்கு காட்பாடிக்கு செல்லும். மறுமார்க்கமாக காட்பாடியில் இருந்து இன்று முதல் தினசரி மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07660) அதேநாளில் மாலை 6 மணிக்கு திருப்பதிக்கு செல்லும்.

இதேபோல், திருப்பதியில் இருந்து நாளை முதல் தினசரி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07661) அதேநாளில் இரவு 9.35 மணிக்கு காட்பாடி செல்லும். மறுமார்க்கமாக காட்பாடியில் இருந்து நாளை முதல் காலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07662) அதேநாளில் காலை 8.35 மணிக்கு திருப்பதி செல்லும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x