Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM

விழுப்புரம், ராமநாதபுரத்தில் - ரூ.3,539 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் : விரைவில் தொடங்க அமைச்சர் நேரு அறிவுறுத்தல்

விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.3,539 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை விரைவில் தொடங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை திட்டங்கள், பராமரிக்கப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் ஆய்வில் உள்ள புதியகுடிநீர் மற்றும் பாதாள சாக்கடைதிட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செயலாக்கத்தில் உள்ள 51 குடிநீர் மற்றும் 19 பாதாளசாக்கடை திட்டப் பணிகளை வேகமாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பராமரிப்பில் உள்ள 557 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு சீரான முறையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,502.72 கோடி மதிப்பிலும், ராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியில் ரூ.2,036.83 கோடி மதிப்பிலும் தலா 60 மில்லியன் லிட்டர்கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை விரைவாக தொடங்கவேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட புதியதிட்டங்களுக்கு திட்ட மதிப்பீட்டைவிரைவாக தயாரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x