Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

ஹட்சன் நிறுவனத்தின் புதிய ஆலையில் - பால் பதப்படுத்துதல், பேக்கிங் பணிகள் தொடக்கம் :

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகாவில் உள்ள ஹட்சன் நிறுவன ஆலையில், ‘ஆரோக்யா’, ‘ஹட்சன்’, ‘அருண் ஐஸ்கிரீம்ஸ்’,‘ஐபாகோ’ ஆகிய பிராண்டுகளுடன், ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் சார்பில் பால் பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் செய்யும் பணி தொடங்கியுள்ளது. ரூ.101 கோடி செலவில் உருவாக்கப்பட்ட, முழு தானியங்கி உற்பத்தி வசதிகளுடன் கூடிய இந்த ஆலை, நாட்டின் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த ஆலைகளில் ஒன்றாக உள்ளது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டுள்ள, இந்த ஆலையில் ஒருநாளைக்கு 3.5 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தவும், பேக் செய்யவும் முடியும். ஹெச்ஏபியின் முக்கிய குறிக்கோளான ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சிறந்த தரமான தயாரிப்புகளை உருவாக்குவது ஆகிய முக்கிய நோக்கங்களுக்கு ஏற்ப ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உற்பத்தி தொழிற்சாலைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது. தனது சில்லறை வணிக கடைகளை மேலும் விரிவாக்கவுள்ளது. ஹட்சன் நிறுவனம், விவசாயிகளுக்கு சிறந்த தொழில்நுட்பம், பண்ணை உள்ளீடுகள், கால்நடை பராமரிப்பு சேவைகள், சிறப்பு கால்நடை தீவனம், அவர்களின் பால் விநியோகத்துக்கான வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்துதல் ஆகியவற்றை தொடர்ந்து செயலாற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் கூறும்போது, ‘‘காங்கயத்திலுள்ள எங்கள் புதிய ஆலையில், ‘ஆரோக்யா’ பிராண்ட் பால் பதப்படுத்தி பேக்கிங் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பால் மற்றும் பால் பொருள் உற்பத்தியில் தானியங்கி தொழில்நுட்பம், உயர்ந்த தரம், சுகாதாரம் ஆகியவற்றில் ஹட்சன் நிறுவனம் முன்னணியில் இருப்பதுடன், சந்தையில் புதிய அளவுகோலை அமைக்கிறது. இந்தப் புதிய ஆலை, நாட்டின் வெண்மைப் புரட்சியில், அதன் தடத்தை பதிவு செய்யும்’’ என்றார்.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x