Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

நீண்ட இழுபறிக்குப் பின்னர் - புதுச்சேரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு : தாமதத்துக்கு பல்கலைக்கழகம் ஆளுநரிடம் விளக்கம்

எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வுமுடிவுகள் நேற்று வெளியானது. தாமதத்துக்கு மத்திய பல் கலைக்கழகம் ஆளுநர் தமிழிசையிடம் விளக்கம் தெரிவித் துள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழ கத்துடன் இணைக்கப்பட்ட இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (பிம்ஸ்), மணக்குள விநாயக மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு பயிலும் மாண வர்கள் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசையை அண்மையில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.

அப்போது, 2021 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தாங்கள் எழுதிய எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அதனால் தாங்கள் பயிற்சி மருத்துவர்களாக சேர முடியவில்லை; இந்த தேர்வு முடிவு தாமதத்தால் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 2022-நீட் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

மாணவர்களின் எதிர்காலத் தைக் கருத்தில் கொண்டு எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு முடிவுகளை புதுச்சேரி பல்கலைக்கழகம் தாமதமின்றி வெளியிட துணைநிலை ஆளுநர் ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உடனடி தலையீட் டைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் இறுதியாண்டு, முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகளை புதுச்சேரி பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றின் காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆளுநரிடம் மத்தியபல்கலைக்கழகம் விளக்கம் தெரிவித்துள்ளது என்று ஆளுநர்மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் 283 மாணவர்கள் உயர் கல்வி மற்றும் பயிற்சி மருத்துவம் பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தற்போது பல்கலைக்கழக தேர்வு முடிவால் அந்த பின்னடைவு நீங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x