Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

உடனடி வேலைவாய்ப்பு தரும் நர்சிங் படிப்பு :

பொது மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் என்றில்லாமல், துணை மருத்துவப் படிப்புகளுக்கு எப்போதும் தேவை இருந்து வருகிறது. பொதுவாகவே, படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் வேலையும், அதன்மூலம் பொருளீட்டுவதையும் எதிர்பார்ப்பது இயல்புதான். எனினும், சில பணிகள் வெறுமனே வேலை என்பதை தாண்டியும் மன நிறைவைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.

அதில், நர்சிங் (செவிலியர்) பணிக்கு, எப்போதும் தனித்த இடம் உண்டு. செவிலியர்கள் வேலை செய்கிறார்கள் என்பதைக் காட்டிலும் அவர்கள் சேவை செய்கின்றனர் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். கரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களுக்கு இணையாக செவிலியர்களின் பணி குறிப்பிடத்தக்கது.

இக்கட்டான இக்காலகட்டத்தில் மருத்துவர் களைகாட்டிலும், செவிலியர்களுக்கான தேவை அதிகரித்தது.

ஒரு நன்கு பயிற்சி பெற்ற செவிலியர் என்பவர் கிட்டத்தட்ட பாதி மருத்துவருக்கு சமம் என்ற அளவில் பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பணி அமைந்திருந்தது.

இன்றைய சூழலில், ஆண்களும் செவிலியர் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டினாலும்கூட, இத்துறையில் ஆதிக்கம் செலுத்துவது என்னவோ பெண்கள்தான். அவர்களுக்கு ஏற்ற துறைகளுள் நர்சிங் படிப்பும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நர்சிங் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகளை கண்காணிப்பதில் இருந்து, தரமான செவிலியர்களை உருவாக்குவது வரை இந்திய நர்சிங் கவுன்சில் (Indian Nursing Council - INC) முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐஎன்சி, நோயாளி - செவிலியர் விகிதாச்சார கணக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மூன்று நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள ஒரு செவிலியர் தேவை என்கிறது. இன்றைய நிலையில், இந்தியாவில் மட்டுமே உடனடியாக சுமார் 4 லட்சம் செவிலியர்களுக்கு பணித்தேவை இருக்கிறது என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள். இந்தியாவில் ஆண்டுக்கு 22 ஆயிரம் செவிலியர்கள் அரசு மற்றும் அதைச் சார்ந்த மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சியால் செவிலியர்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

மருத்துவ சுற்றுலா மேற்கொள்ளும் நிறுவனங்கள், ஹோம் நர்சிங், இண்டஸ்ட்ரியல் நர்சிங் என செவிலியர்களுக்கு வேலைவாய்ப்புக்கான எல்லைகளும் விரிவடைந்திருக்கின்றன. தவிர, வளைகுடா நாடுகள், இந்திய நர்சுகளுக்கு கைநிறைய சம்பளத்தை கொடுத்து பணிக்கு அமர்த்தி கொள்கின்றன.

கேரளாவில் உருவாகும் நர்சுகளில் கணிசமா னோர், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்றுவிடுவது இப்போதும் தொடர்ந்து வருகிறது.

நர்சிங் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி போதுமானது. செவிலியர் படிப்பை முடித் தவுடனேயே உள்ளூரிலேயே முன்னணி தனியார் மருத்துவமனைகளில் ரூ.7,000 முதல் ரூ.15,000 வரையிலான ஊதியத்தில் பணி வாய்ப்பை பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x