Published : 10 Jul 2021 03:14 AM
Last Updated : 10 Jul 2021 03:14 AM

புதுச்சேரி பெரிய மார்க்கெட் - அடி காசு கடை வசூலை தனியாருக்கு ஏலம் விடக்கூடாது : சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுச்சேரி பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி அடிகாசு கடை வியாபார தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் (ஏஐடியுசி) டிவி நகரில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தயாளன், சுரேஷ்குமார், குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐடியூசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், பெரிய மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க செயல்தலைவர் எம்எஸ் (எ) சுப்பரமணி, தலைவர் சிவகுருநாதன், பூக்கடை வியாபாரிகள் சங்க பொறுப்பாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தலைவராக தயாளன், துணைத் தலைவர்களாக முருகேசன், பாலசுப்ரமணியன், கோவிந் தன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், அடி காசு கடைகளுக்கு புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் தினசரி பணம் வசூல் செய்து வந்தது. தற்போது இதனை தனியாருக்கு ஏலம் விட்டு வசூல் செய்வது என முடிவு செய்துள்ளது. இதனை கைவிட்டு நகராட்சி நிர்வாகமே வசூல் செய்ய வேண்டும். அதேபோல், தினசரி வசூல் செய்வதை மாத கட்டணமாக நிர்ணயித்து வசூல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய மார்க்கெட் நடை பாதையில் உள்ள தரைகள் நீண்டகாலத்துக்கு முன்பு போடப்பட் டவை. இந்த தரையை நடந்து செல்வதற்கு ஏதுவாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய மார்க்கெட்டுக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள்வந்து செல்கிறார்கள். இங்கு குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்திட வேண்டும். கழிவறைகளை நவீன கழிப்பிடமாக மாற்றிட வேண்டும்.

பெரிய மார்க்கெட்டில் உள்ளவாய்க்கால்களை மழைக்காலத் திற்கு முன்னதாக சுத்தம் செய்து மேல் சிலாப் பொருத்திட வேண்டும். பெரிய மார்க்கெட்டில் பகல் நேரங் களில் குப்பை அள்ளுவதால் வியாபாரம் செய்பவர்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. எனவே, இரவு நேரங்களில் குப்பை அள்ளுவதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.

பழுதடைந்துள்ள மின் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றி, தொடர்ந்து இரவு நேரங்களில் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x