சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி - மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் :

பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணையை பெற்ற சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.
பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணையை பெற்ற சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்ற சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் வள்ளியப்பா, மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:

சோனா கல்லூரி ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் வலுவான கவனம் செலுத்துகிறது. இவை மாணவர்கள் தங்கள் நலன்களைக் கண்டறியவும், கல்வி ஆய்வுகள் மற்றும் தொழில்துறையில் அவர்கள் எதிர்கால சவால்களின் வரம்பை எதிர்கொள்ளவும் உதவுகிறது.தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஐடி மற்றும் துறை சார்ந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற துறை மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில், 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 600 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், வேலைவாய்ப்பு துறை இயக்குநர் பேராசிரியர் சரவணன், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் காதர்நவாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in