Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM

மேஷம்: அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு

மேஷம்: அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.மிதுனம்: புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.கடகம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். மறைமுகப் பிரச்சினைகள் வரும். வாகனம் செலவு வைக்கும்.சிம்மம்: பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்களில் சிலர் உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.கன்னி: உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.துலாம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும். மூத்த சகோதரர் உதவுவார்.விருச்சிகம்: எதிலும் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படக் கூடும்.தனுசு: சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். ஓரளவு பணவரவு உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அனுகூலம் ஏற்படும்.மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். ஆன்மிகப் பயணம் ஏற்படும்.கும்பம்: புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.மீனம்: மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடின உழைப்பு வெற்றி தரும். நீண்டகால கடன் பிரச்சினைக்கு முடிவு காண்பீர்கள். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x