Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு - தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் தடகளபோட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் சிறப்பு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தை பெருக்கவும், அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் அரசு தேவையான பயிற்சிகள் மற்றும் ஊக்கத்தொகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஜப்பானின் டோக்கியோவில், ஜூலை 23 முதல்ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளஒலிம்பிக் போட்டிகளில் தடகளவிளையாட்டில் தொடர் ஓட்டத்தில்ஆண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி,கலப்பு பிரிவில் பங்கேற்கும் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் மற்றும் ரேவதி வீரமணி என 5 தடகள வீரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூ.5 லட்சம் என ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம்ஊக்கத்தொயை கடந்த ஜூன் 26-ம்தேதியும், பவானிதேவிக்கு ரூ.5 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையை ஜூன் 20-ம் தேதியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x