Published : 28 Jun 2021 03:11 AM
Last Updated : 28 Jun 2021 03:11 AM

4 மொழிகளில் நயன்தாரா :

ஷாருக்கான், அட்லீ இணையும் இந்தி படத்தில் ஒரு பிளாஷ்பேக் பகுதியில் நடிக்க நயன்தாராவிடம் படக்குழு பேசியுள்ளது. அந்த கதைப் பகுதி பிடித்துப்போக, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்க உள்ள ஒரு படத்திலும் நடிக்கிறார். இதில் நாயகனாக பகத் பாசில் நடிக்கிறார். இப்படத்தின் வேலைகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கிடையில், ‘லூஸிஃபர்’ தெலுங்கு ரீமேக் படத்தில் தனது கதாபாத்திரம் தொடர்பான வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ‘நெற்றிக்கண்’, ‘அண்ணாத்த’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என கவனம் செலுத்தும் அவர், மொத்தம் 4 மொழிகளில் பரபரப்பாக இயங்கிவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x