Published : 25 Jun 2021 03:11 AM
Last Updated : 25 Jun 2021 03:11 AM

2020-ல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி: இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 4.4 % சரிவு

புதுடெல்லி

2020ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டதால் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 4.4 சதவீதம் குறைந்து 12.83 ட்ரில்லியன் டாலராக உள்ளதாக கிரெடிட் சூயஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கரோனா பாதிப்பினால் உலகப் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்த நிலையிலும் உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 5.2 மில்லியன் அதிகரித்து 56.1 மில்லியனாக உள்ளதாக கிரெடிட் சூயஸ் ஆய்வுநிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதில் ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் இந்தியர்கள்.

2019-ல் 7,64,000 ஆக இருந்த இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020-ல் 6,98,000 ஆகக்குறைந்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக இவர்களின் சொத்து மதிப்பு 2019-ஐக் காட்டிலும் 4.4 சதவீதம் அதாவது 594 பில்லியன் டாலர் குறைந்து 12.833 ட்ரில்லியன் டாலராக இருப்பதாகக் கூறியுள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம் இந்திய ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட வீழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளது.

2020-ல் இந்திய ரூபாய் மதிப்பு 3 சதவீதம் வரை சரிவைக்கண்டது. மொத்த கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சரிந்த நிலையிலும், முகேஷ் அம்பானி, கவுதம் அதானி மற்றும் பூனவல்லா ஆகியோரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2020-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.90 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.6.58 லட்சம் கோடி ஆகும். கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 2020-ல் 16.2 பில்லியன் டாலர் உயர்ந்து 67.6 பில்லியன் டாலராக உள்ளது.

2025-ல் இந்திய மில்லியனர்கள் எண்ணிக்கை 81.8% உயர்ந்து 1.3 மில்லியன் அளவுக்கு உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 மில்லியன் டாலருக்குமேல் சொத்து மதிப்பு கொண்டபணக்காரர்களின் எண்ணிக்கை4,320 ஆக உள்ளதாக அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x