Published : 25 Jun 2021 03:14 am

Updated : 25 Jun 2021 03:14 am

 

Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

அரிய வகை கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள - மதுரை சகோதரிகளுக்கு மருத்துவ உதவி : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

அரிய வகை கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை சகோதரிகளுக்கு தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் ஜோசப் (76). இவரது மகள் ஜெனிதா, அவரது கணவர் ஜேம்ஸ். இவர்களின் மகள்கள் ரெபேகா ஜே சுஸ்மிதா (20), மெர்லின் ஜே டயானா (17). இவர்கள் பிறந்ததில் இருந்தே அரிய வகையான ரெடினைடீஸ் பிக்மென்டோ என்ற கண் நோயால் பாதிக்கப்பட்டனர். இருவராலும் நேர்கோட்டில் 5 முதல் 6 அடி தூரம் வரை மட்டுமே பார்க்க முடியும். பக்கவாட்டு பார்வை சுத்தமாக இல்லை. கண் மருத்துவமனை களில் இந்நோய்க்கு சிகிச்ைசயில்லை எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது ரெபேகா சென்னையில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு, மெர்லின் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.


இந்நிலையில் தனது பேத்திகளை கேரளாவில் உள்ள ஆயுர்வேத கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க, நிதியுதவி வழங்க உத்தரவிடக்கோரி அரசுக்கு ஜோசப் மனு அனுப்பினார். இந்த மனு 5.7.2012-ல் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் ஜோசப் 2017-ல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரின் பேத்திகள் அரிய வகை கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவ உதவி வழங்கும் நோய்களின் பட்டியலில் இந்த அரிய வகை கண் நோய் இல்லை என்பதால் நிதி உதவி மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதை ஒரு அரிதினும் அரிதான வழக்காக கருதி இருவரின் சிகிச்சைக்கு தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க வேண்டும் என 3.1.2017-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறை யீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. ஆயுர்வேத சிகிச்சை யில் சிறுமிகளின் தற்போதைய 10 டிகிரி பார்வையை பாதுகாக்கலாம் என கூறப்படுகிறது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை 3 மாதங்களில் செயல்படுத்த வேண்டும். மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x