Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

மேஷம்: தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்

மேஷம்: தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள்.ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக முடித்துக் காட்டுவீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. திடீர் பயணம் ஏற்படும்.மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு உண்டு.கடகம்: செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு தளரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தில் அனைவரும் ஏற்பார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். விருந்தினர் வருகை உண்டு.கன்னி: கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்துக் காட்டுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.விருச்சிகம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.தனுசு: ஓய்வெடுக்க முடியாதபடி வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள். முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள்.மகரம்: குடும்பத்தில் சுபச் செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். நண்பர்கள், உறவினர் வருகையால் வீடு களைகட்டும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும்.கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.மீனம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை அமையும். திடீர் பயணம் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x