Published : 24 Jun 2021 05:50 am

Updated : 24 Jun 2021 05:50 am

 

Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

தமிழகத்தில் குறைந்து வருகிறது தொற்று - புதிதாக 6,596 பேருக்கு கரோனா :

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 6,596 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு:


தமிழகத்தில் நேற்று ஆண்கள்3,709, பெண்கள் 2,887 என மொத்தம் 6,596 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 793, ஈரோட்டில் 686, சென்னையில் 396 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்து 43,415 ஆக அதி கரித்துள்ளது.

கோவையில் 7,654, ஈரோட்டில் 5,318, சென்னையில் 3,447 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 52,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

166 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். கோவையில் 25,சென்னையில் 20 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில்கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,746ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,115 பேர் இறந்துள் ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 30,432, கோவையில் 2 லட்சத்து 15,051, செங்கல்பட்டில் 1 லட்சத்து 54,994, திருவள்ளூரில் 1 லட்சத்து 10,056 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 273 அரசு மற்றும்தனியார் ஆய்வகங்களில் இது வரை 3 கோடியே 16 லட்சத்து 75,744 பரிசோதனைகள் நடை பெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 70,105 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x